Homeசெய்திகள்சினிமா'வீர தீர சூரன்' முதல் நிமிடங்களை மிஸ் பண்ணாதீங்க.... ரசிகர்களுக்கு அருண்குமார் வேண்டுகோள்!

‘வீர தீர சூரன்’ முதல் நிமிடங்களை மிஸ் பண்ணாதீங்க…. ரசிகர்களுக்கு அருண்குமார் வேண்டுகோள்!

-

- Advertisement -

வீர தீர சூரன் படத்தின் முதல் 20 நிமிடத்தை மிஸ் பண்ணாதீங்க என்று இயக்குனர் அருண்குமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.'வீர தீர சூரன்' முதல் நிமிடங்களை மிஸ் பண்ணாதீங்க.... ரசிகர்களுக்கு அருண்குமார் வேண்டுகோள்!

தமிழ் சினிமாவில் அருண்குமார் பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதை தொடர்ந்து சேதுபதி, சித்தா என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். 'வீர தீர சூரன்' முதல் நிமிடங்களை மிஸ் பண்ணாதீங்க.... ரசிகர்களுக்கு அருண்குமார் வேண்டுகோள்!இந்த படம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி நேற்று (மார்ச் 20) இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அத்துடன் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் அருண்குமார், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி அவர் “வீர தீர சூரன் படத்தின் முதல் 20 நிமிடங்களை மிஸ் பண்ணாதீங்க கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.'வீர தீர சூரன்' முதல் நிமிடங்களை மிஸ் பண்ணாதீங்க.... ரசிகர்களுக்கு அருண்குமார் வேண்டுகோள்!

அனைத்து படங்களிலுமே முதல் பாகத்திற்கு பின்னர் தான் இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால் அருண்குமார் வீர தீர சூரன் படத்தினை வித்தியாசமாக முதலில் இரண்டாம் பாகத்தினை எடுத்திருக்கிறார். மேலும் இந்த படமானது ராவான – கல்ட் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ