Homeசெய்திகள்சினிமாதல வந்தா தள்ளிப்போய் தானா ஆகணும்.... 'டிராகன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தல வந்தா தள்ளிப்போய் தானா ஆகணும்…. ‘டிராகன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

டிராகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தல வந்தா தள்ளிப்போய் தானா ஆகணும்.... 'டிராகன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் டிராகன். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். காதலர் தினத்தன்று திரைக்கு வரும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் சமீபத்தில் டிராகன் திரைப்படமானது பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. டிராகன் திரைப்படமானது காதல் கதைக்களம் என்பதால் காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தனர்.தல வந்தா தள்ளிப்போய் தானா ஆகணும்.... 'டிராகன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!ஆனால் தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி திரைக்கு வருவதால் டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில், “தல வந்தா தள்ளிப் போய் தானா ஆகணும்” என்று குறிப்பிட்டு டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏஜிஎஸ் நிறுவனமும் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் பிப்ரவரி 21ம் தேதி தான் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ