நடிகர் அஜித் தனது 61வது படமான துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62 வது படமான இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். தற்போது இதன் இறுதி கட்டப் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டான நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்க இருக்கின்றன.
இதைத்தொடர்ந்து அஜித்தின் 64வது திரைப்படத்தை பிரசாந்த் நீல் அல்லது சிறுத்தை சிவா இயக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் அடுத்து வரும் அஜித் படம் ஒன்றை இயக்குனர் மோகன் ராஜா இயக்குவார் என்றும் புதிய தகவல் வெளியானது. அதாவது இந்த படம் ஏகே 65 படமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு அஜித்தின் அடுத்தடுத்த படங்களை இயக்க இயக்குனர்கள் பலரும் வரிசை கட்டி நிற்கின்றனர். அந்தப் பட்டியலில் புதிதாக பிரபல பெண் இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளார்.
அதாவது இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான சுதா கொங்கரா, ஏகே 65 படத்தில் அஜித்துடன் கைகோர்ப்பார் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க போகிறார் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும் அஜித்தின் ஏகே 64 மற்றும் ஏகே 65 ஆகிய படங்களை யார் இயக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -