spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅட..... 'இந்தியன் 3' ட்ரெய்லரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

அட….. ‘இந்தியன் 3’ ட்ரெய்லரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

-

- Advertisement -

நடிகர் கமல் கடந்த 1996 இல் சங்கர் இயக்கத்தில் இந்தியன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அட..... 'இந்தியன் 3' ட்ரெய்லரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?இந்தப் படம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 26 வருடங்கள் கழித்து இந்தியன் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. கமல், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்த இந்தியன் 2 திரைப்படம் இன்று (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. மிகப் பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் வெளியான இந்தியன் 2 திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அட..... 'இந்தியன் 3' ட்ரெய்லரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?இருப்பினும் இந்தியன் 2 படத்தில் இறுதியில் இந்தியன் 3 பட ட்ரெய்லர் இடம்பெறும் என்று ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்தியன் 2 படத்தை காண சென்ற ரசிகர்கள் இந்தியன் 3 பட ட்ரெய்லரையும் கண்டு களித்துள்ளனர். அதே சமயம் இந்தியன் 3 ட்ரெய்லர் இணையத்திலும் லீக் ஆகிவிட்டது. அதாவது கமல் ஏற்கனவே சொன்னது போல் இந்தியன் 3இல் சேனாபதியின் தந்தையை காட்டுகின்றனர்.அட..... 'இந்தியன் 3' ட்ரெய்லரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?நடிகர் கமல் ஃப்ளாஷ்பேக்கில் , சேனாபதியின் தந்தை வீரசேகரனை பற்றி சொல்கிறார். வீரசேகரனாக நடித்திருக்கும் கமல் இளமையான தோற்றத்தில் காட்டப்படுகிறார். மேலும் அதில் சேனாபதியின் தாயாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். அதாவது இந்தியன் 3 பட ட்ரெய்லர் முழுவதும் பீரியாடிக் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பாக நாடு எப்படி இருந்தது. மக்கள் எவ்வளவு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதன் அடிப்படையில் இந்தியன் 3 உருவாகி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

நம் முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சுதந்திர நாட்டை லஞ்சம் வாங்கி கெடுத்து விடாதீர்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்தியன் திரைப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எதிர்பார்ப்புகளுடன் படத்தை காணச் சென்ற ரசிகர்களுக்கு இந்தியன் 2 சற்று அதிருப்தியை ஏற்படுத்தினாலும் இந்தியன் 3 பட ட்ரெய்லர் கூஸ்பம்ஸ் கொடுத்திருக்கிறது.

MUST READ