Homeசெய்திகள்சினிமாசூரியின் கருடன் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

சூரியின் கருடன் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

-

கடந்த 2009-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சூரி. இதையடுத்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சூரியின் திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில் பெரும்பாலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்திருப்பார். வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் முதல் முறையாக ஹீரோகாவ நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்தில் நடித்தார்.இதனிடையே, துரை செந்தில் குமார் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடித்துள்ளார். வெற்றிமாறன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அண்மையில் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில், படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி இருக்கிறது. அது இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

MUST READ