
திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை வாமிகா கேபி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டிசி’ (DC). அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் வருகிற 31ம் தேதி (ஜூலை) திரைக்கு வர உள்ள நிலையில், ‘டிசி’ படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்கிற கதாப்பாத்திரத்திலும், வாமிகா ‘சந்திரா’ என்னும் கேரக்டரிலும் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ஹங்கோவா’ (Hangover) நாளை வெளியாகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் – வாமிகா கேபி நடிக்கும் ‘டிசி’ திரைப்படத்தின் எனர்ஜிட்டிக் சிங்கிள் ‘ஹங்கோவா’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது” என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
La la lost in your #Hangova 🖤🎵
Music Video releasing Tomorrow, 6 PM 🥂 #DC@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy @mukesh_DOP #PrasannaGK #KannanS @PC_stunts @kabilanchelliah pic.twitter.com/o0PDcMF3kO— Sun Pictures (@sunpictures) July 5, 2026
கூட்டணி மீதான எதிர்பார்ப்பு:
இயக்குநராகப் பல மெகா ஹிட் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் களமிறங்கி இருப்பது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அனிருத் இசை என்பதால் லோகேஷ் – அனிரூத் கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
