spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநல்ல வாழ்க்கை துணையை தேடுகிறேன்... நடிகை மம்தா மோகன்தாஸ் பேட்டி...

நல்ல வாழ்க்கை துணையை தேடுகிறேன்… நடிகை மம்தா மோகன்தாஸ் பேட்டி…

-

- Advertisement -

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை மம்தா மோகன்தாஸ். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் விஷாலுடன் சிவப்பதிகாரம் என்ற படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ரஜினி நடித்த குசேலன், மாதவன் நடித்த குரு என் ஆளு, அருண் விஜய்யின் தடையற தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை மம்தா மோகன்தாஸ் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

we-r-hiring
வெண்புள்ளிகளால் அவதிப்பட்டு வந்த அவர் பல மாதங்களுக்கு சிகிச்சை எடுத்த பின் பூரண குணமடைந்து திரும்பினார். தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக உருவாகி இருக்கம் மகாராஜா திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமன்றி அவர் சிறந்த பாடகியும் ஆவார். தமிழில் வில்லு படத்தில் டாடி மம்மி என்ற பாடலை பாடியிருப்பார். கோவா படத்திலும் ஒரு பாடல் பாடியிருப்பார்.

இந்நிலையில், நடிகை மம்தா மோகன்தாஸ், திருமணம் செய்வதற்காக நல்ல துணையை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பேட்டியில், தான் அமெரிக்காவில் இருந்தபோது, ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் அது நீடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு உறவு நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும், அழுத்தம் தரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

MUST READ