Homeசெய்திகள்சினிமாராமநாதபுரத்தில் நடைபெறும் 'இட்லி கடை' படப்பிடிப்பு!

ராமநாதபுரத்தில் நடைபெறும் ‘இட்லி கடை’ படப்பிடிப்பு!

-

- Advertisement -

தனுஷின் இட்லி கடை படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.ராமநாதபுரத்தில் நடைபெறும் 'இட்லி கடை' படப்பிடிப்பு!

நடிகர் தனுஷ் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படம் தனுஷின் 52ஆவது படமாகும். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கிரண் கௌசிக் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் தொடங்கப்பட்டு அதைத் தொடர்ந்து பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. ராமநாதபுரத்தில் நடைபெறும் 'இட்லி கடை' படப்பிடிப்பு!அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. இந்த படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய் கலந்து கொள்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இப்படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ