Homeசெய்திகள்சினிமாஇந்தியன் 2 முதல் பாடல் ரிலீஸ்... சென்னையில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு...

இந்தியன் 2 முதல் பாடல் ரிலீஸ்… சென்னையில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு…

-

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கமலை வைத்து மீண்டும் இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர்,உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வௌியாக ஒரு மாதமே உள்ள நிலையில், படத்தின் ப்ரமோசன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியானது. விரைவில் இப்பாடல் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை நேரு அரங்கில் வரும் மே மாதம் 3-ம் தேதி பிரம்மாண்ட விழா நடத்தி, பாடலை வௌியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ