spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதளபதி 68-யில் தல தோனி நடிக்கிறாரா?

தளபதி 68-யில் தல தோனி நடிக்கிறாரா?

-

- Advertisement -

விஜய் தனது 67வது படமான லியோ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதைத் தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்புகளும் லியோ படத்தில் ரிலீசுக்கு பிறகு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜயின் தளபதி 68 படத்தில் மகேந்திர சிங் தோனி நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ஏற்கனவே தளபதி 68 படத்திற்கு CSK என்ற தலைப்பு வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் வெங்கட் பிரபு ஏற்கனவே சென்னை 600028 பாகம் 1 மற்றும் 2 ஆகிய படங்களை கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் இயக்கியிருந்தார்.

we-r-hiring

அதனால் தளபதி 68 படத்தில் கிரிக்கெட் வீரர் தல தோனி நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ஹரிஷ் கல்யாணி எல் ஜி எம் திரைப்படத்தை எம் எஸ் தோனி தயாரித்திருந்தார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எம் எஸ் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி, நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் அமைந்தால் தோனி நடிப்பது சம்பந்தமாக பரிசீலிப்பார் என்று பேசியிருந்தார்.

அதனால் நடிகர் தோனி இனிவரும் காலங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ