spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅர்ஜுன் தாஸ் நடிக்கும் 'பாம்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘பாம்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!

-

- Advertisement -

அர்ஜுன் தாஸ் நடிக்கும் பாம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'பாம்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!

தமிழ் சினிமாவில் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். மேலும் இவர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இதற்கிடையில் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் பாம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து சிவாத்மிகா, காளி வெங்கட், நாசர், அபிராமி, பால சரவணன், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிக்க டி. இமான் இதற்கு இசை அமைத்திருக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'பாம்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!இந்த படமானது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. மேலும் இந்த படமானது 2025 ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இப்படம் 2025 செப்டம்பர் 12ஆம் தேதி திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ