குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்தின் 63 வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தினை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
இந்த டீசரை பார்க்கும்போது ஏற்கனவே வெளியான தகவலின்படி நடிகர் அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடித்திருக்கிறார் போல் தெரிகிறது. அடுத்தது வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படம் தொடர்பான புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.