Homeசெய்திகள்சினிமாஜவானின் 11வது நாள் மிரட்டும் வசூல்!

ஜவானின் 11வது நாள் மிரட்டும் வசூல்!

-

- Advertisement -

ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி நடிப்பில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் ஒவ்வொரு நாளும் வசூலை வாரி குவித்த வண்ணம் உள்ளது. ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆகி 11 நாட்கள் ஆன நிலையில் இப்படத்தின் வசூல் 858.68 கோடி என படக் குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜவான் ஆயிரம் கோடி கிளப்பில் இன்னும் ஒரு சில தினங்களில் இணைய உள்ளது. அடுத்தடுத்து வெளியான ஷாருக்கானின் இரண்டு படங்களுமே ஆயிரம் கோடி வசூலை எட்டியதால் இந்த சாதனை ஷாருக்கானுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.மேலும் இப்படம் ஹிந்தி மொழியில் வெறும் பதினொரு நாட்களிலேயே மிக விரைவாக 400 கோடியை தொட்ட படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல ஒரு லாபத்தை கொடுத்துள்ளது.

MUST READ