spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்தியன் 2 டிஜிட்டல் உரிமை... ஓடிடி தளங்களுக்கு மத்தியில் குழப்பம்...

இந்தியன் 2 டிஜிட்டல் உரிமை… ஓடிடி தளங்களுக்கு மத்தியில் குழப்பம்…

-

- Advertisement -
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கமலை வைத்து மீண்டும் இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர்,உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்ற மற்ற ஓடிடி நிறுவனங்களும் அதிக விலை பேசி வருவதால், குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது.

MUST READ