spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகார்த்தி நடிக்கும் 'மெய்யழகன்' படத்தின் டெல்டா கல்யாணம் பாடல் வெளியீடு!

கார்த்தி நடிக்கும் ‘மெய்யழகன்’ படத்தின் டெல்டா கல்யாணம் பாடல் வெளியீடு!

-

- Advertisement -

கார்த்தி நடிக்கும் மெய்யழகன் படத்தின் டெல்டா கல்யாணம் பாடல் வெளியாகி உள்ளது.கார்த்தி நடிக்கும் 'மெய்யழகன்' படத்தின் டெல்டா கல்யாணம் பாடல் வெளியீடு!

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதன்படி வா வாத்தியார் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் கார்த்தி. இதற்கிடையில் இவர், 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் கார்த்திவுடன் இணைந்து அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேந்திரன் ராஜு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படமானது வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அதேசமயம் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து டெல்டா கல்யாணம் எனும் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் பாடலின் வரிகளை கார்த்திக் நேதா எழுதியிருக்கும் நிலையில் வி எம் மகாலிங்கம், செந்தில் கணேஷ், கோவிந்த் வசந்தா உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ