spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!

பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!

-

- Advertisement -

பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகரான கசான் கான் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

we-r-hiring

இவர் தமிழில் கடந்த 1992 ஆம் ஆண்டு செந்தமிழ் பாட்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும் மேட்டுக்குடி சேதுபதி ஐபிஎஸ் முறைமாமன் பிரியமானவளே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

மலையாளத் திரை உலகில் கடந்த 1993 ஆம் ஆண்டு கந்தர்வம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து லைலா ஓ லைலா, ராஜாதி ராஜா, மரியாதா ராமன் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்திருந்தார்.

இவர் பெரும்பாலான படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

இவர் தென்னிந்திய திரை உலகில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இவர் சில நாட்களுக்கு முன்பே இறந்து விட்டதாகவும், தற்போது தான் அவரின் இறப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது எனவும் கூறப்படுகிறது.

MUST READ