Homeசெய்திகள்சினிமா'லியோ' படத்தில் இணைந்த கிரண்..... அவரே கொடுத்த அப்டேட்!

‘லியோ’ படத்தில் இணைந்த கிரண்….. அவரே கொடுத்த அப்டேட்!

-

விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இதற்கிடையில் லியோ திரைப்படத்தில் பல பிரபலங்கள் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது. அதன்படி அனுராக் காஷ்யப், மடோனா செபாஸ்டியன், வையாபுரி, அர்ஜுன் தாஸ், நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நடிகை கிரண் லியோ படத்தில் விஜயுடன் நடித்திருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஏற்கனவே கிரண், திருமலை திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லியோ திரைப்படத்திலும் நான் ரெடி எனும் பாடலுக்கு கிரண் நடனமாடி உள்ளதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை கிரண் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

MUST READ