- Advertisement -
லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள ‘தி கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ லியோ’ திரைப்படம் நான்கு நாட்களில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, ராபர்ட் டி நிரோ ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’. 1920களில் அமெரிக்காவின் ஓசேஜ் நேஷன் என்று அழைக்கப்படும் பழங்குடியின நிலத்தை கைப்பற்றிய அமெரிக்கர்கள், அங்கு நிகழ்த்திய தொடர் கொலைகளை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 20ஆம் தேதி பல்வேறு நாடுகளில் வெளியானது. இப்படம் இந்தியாவில் வரும் அக்டோபர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.




