Homeசெய்திகள்சினிமாவிஷால், எஸ் ஜே சூர்யா காம்போவின் 'மார்க் ஆண்டனி'..... அட்டகாசமான ட்ரெய்லர் வெளியீடு!

விஷால், எஸ் ஜே சூர்யா காம்போவின் ‘மார்க் ஆண்டனி’….. அட்டகாசமான ட்ரெய்லர் வெளியீடு!

-

- Advertisement -

மார்க் ஆண்டனி படத்தில் டிரைலர் ரிலீஸாகியுள்ளது.

விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷால் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்
உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், ரித்துவர்மா, அபிநயா, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதல் மூன்று பாடல்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

we-r-hiring

தற்போது அட்டகாசமான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரானது நடிகர் கார்த்தியின் குரலுடன் தொடங்குகிறது. டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. ட்ரெய்லர் முழுக்க காமெடி நிறைந்து காணப்படுகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தை கொடுத்துள்ளார். தற்போது இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ