spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஷூட்டிங் ஓவர்… மடோன் அஸ்வின்- சிவகார்த்திகேயன் கூட்டணியின் மாவீரன் அப்டேட்!

ஷூட்டிங் ஓவர்… மடோன் அஸ்வின்- சிவகார்த்திகேயன் கூட்டணியின் மாவீரன் அப்டேட்!

-

- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்‘ திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, மிஸ்கின், சரிதா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை யோகிபாபுவின் நடிப்பில் ‘மண்டேலா’ திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

we-r-hiring

இந்த படம் ‘மாவீரன்’ என்று தமிழிலும் ‘மாவீருடு’ என்று தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஏற்கனவே தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

ஆனால் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதால் மாவீரன் திரைப்படம் அதற்கு முன்பாகவே ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் டப்பிங் வேலை தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

MUST READ