Homeசெய்திகள்சினிமாநானி நடிக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை'.... லேட்டஸ்ட் அப்டேட்!

நானி நடிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

நானி நடிக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை'.... லேட்டஸ்ட் அப்டேட்!நானி நடிப்பில் கடைசியாக ஹாய் நான்னா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்திருந்தார். நல்ல ஒரு பீல் குட் படமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதேசமயம் நடிகர் நானி, சூர்யாவின் சனிக்கிழமை என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இந்த படத்திற்கு சரிபோதா சனிவாரம் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். நடிகர் நானி அந்தே சுந்தரானிகி என்ற படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக விவேக் ஆத்ரேயாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். நானி நடிக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை'.... லேட்டஸ்ட் அப்டேட்!மேலும் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  போர் தொழில் படத்திற்கு இசையமைத்திருந்த ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ