நானியின் ஹிட் 3 படத்தில் வசூல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் நானி தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் இவர் நடித்திருந்த வெப்பம், நான் ஈ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது தவிர இவரது நடிப்பில் வெளியான ஹாய் நான்னா, சூர்யாவின் சனிக்கிழமை ஆகிய படங்களும் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் நானி, தி பாரடைஸ் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். அதற்கு முன்னதாக இவர், சைலேஷ் கொலானு இயக்கத்தில் ஹிட் 3 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மே 1 அன்று திரைக்கு வந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. வால் போஸ்டர் சினிமா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அன்அனிமஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகியிருந்த இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிரிமினல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படத்தில் நடிகர் நானி, போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான ஏற்படும் வெளியான முதல் நாளில் ரூ. 43 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என படக்குழு அறிவித்திருந்தது.
அதை தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது வெளியான இரண்டு நாட்களில் இப்படம் ரூ. 62 கோடியை கடந்திருப்பதாக அறிவித்துள்ளது. வெறும் இரண்டு நாட்களில் மின்னல் வேகத்தில் வசூலை வாரிக் குவித்து வரும் இப்படம், தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் மேலும் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.