spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல யூட்யூபர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல யூட்யூபர்!

-

- Advertisement -

நயன்தாராவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா, ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை வாமனன், மனிதன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார்.

we-r-hiring

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜா இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையில் நயன்தாரா, அட்லீ, ஷாருக்கான், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் ஜவான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

மேலும் சில படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். குறிப்பாக இவர் கதாநாயகி முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் பிரபல யூடியூபர் டியூட் விக்கி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது. கதாநாயகியை முன்னணியாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தின் பூஜை வருகின்ற ஜூலை 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் மற்ற அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ