spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகுழந்தையுடன் சில் செய்யும் நயன்தாரா

குழந்தையுடன் சில் செய்யும் நயன்தாரா

-

- Advertisement -
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு நான்கு மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என்று பெயரிட்டனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் இதுவரை குழந்தைகளின் முகத்தை காட்டாமல் இருந்தனர். தற்போது குழந்தைகள் பிறந்து ஒரு வருடங்கள் நெருங்க இருக்கும் நிலையில் குழந்தைகளின் முகத்தை வெளிக்காட்டி உள்ளனர். இது சம்பந்தமான வீடியோவை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கி வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், தற்போது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கை, கால்களை நயன்தாரா அழுத்தி விடும் காணொலியை, தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

MUST READ