பூஜா ஹெக்டேவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
திரையுலகில் நடிகர் நடிகைகள் என்றாலே காதல், கல்யாணம் என்ற பல வகையில் கிசுகிசுகளுக்கு சிக்காதவர்கள் எவரும் இலர். அந்த வகையில் சமீப காலமாக திரிஷா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்ளிட்ட நடிகைகள் குறித்த தவறான வதந்திகளை பலரும் பரப்பி வருகின்றனர்.

தற்போது பூஜா ஹெக்டேவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து விஜயின் பீஸ்ட் படத்திலும் நடித்துள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் சமீபத்தில் சல்மான்கான் திருமணம் செய்யப் போவதாக வதந்திகள் பரவி வந்தது. ஒரு கட்டத்தில் பூஜா ஹெக்டே இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பூஜா ஹெக்டே, மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூஜா ஹெக்டேவின் தரப்பில் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால் பூஜா ஹெக்டேவின் திருமணம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


