Homeசெய்திகள்சினிமாவிஜய் நாயகி.. பூஜா ஹெக்டேவிற்கு பிடித்த ஸ்நாக்ஸ் இதுதானாம்.. பூரித்து போன ரசிகர்கள்

விஜய் நாயகி.. பூஜா ஹெக்டேவிற்கு பிடித்த ஸ்நாக்ஸ் இதுதானாம்.. பூரித்து போன ரசிகர்கள்

-

- Advertisement -

ரெட்ரோ.. ஜனநாயகன் பட நாயகி பூஜா ஹெக்டே சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒரு கப் டீயில் 5 ரூபாய் பார்லே ஜி பிஸ்கெட்டை நனைத்து சாப்பிடும் பூஜா ஹெட்டே வெளியூரில் இருந்தாலும் வீட்டில் இருப்பதைப் போல உணர வைப்பதாக கூறியுள்ளார்..

 

90 கிட்ஸ் மறக்கமுடியாத பிஸ்கெட் குருவி ரொட்டி என்று சொல்வார்கள்.. அதே போல பார்லே ஜி பிஸ்கெட்டும் பாக்கெட்டில் வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். 5 ரூபாய் பிஸ்கெட்டை தண்ணீரில் நனைத்து சாப்பிட்டாலே பலரது பசி அடங்கி விடும். இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் கூட பார்லே ஜி பிஸ்கெட்டிற்கு வரவேற்பு அதிகமாகவே உள்ளது.

சமீபத்தில் போர்சூழல் நிறைந்த காசாவில் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட் 2300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. தற்போது பான் இந்தியா நடிகை பூஜா ஹெக்டோவும் தனக்கு பிடித்தமான பிஸ்கெட் பார்லே ஜி என்று கூறியுள்ளார்.

பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு  கப்பில் டீயை வைத்து மற்றொரு கையில் பார்லே ஜி பிஸ்கெட்டை தொட்டு சுவைத்துக்கொண்டே தனது பீலிங்ஸ் எப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

சில விஷயங்கள் நம்மை வீட்டில் இருப்பதை போல உணரவைக்கும். அதில் ஒன்று தான், பார்லே ஜி பிஸ்கட்டை டீ உடன் நனைத்து சாப்பிடுவது” என்று தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரெட்ரோ படத்தில் கனிமா பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பூஜா ஹெக்டே இப்போது பார்லே ஜி பிஸ்கெட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டார்.

MUST READ