spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதளபதி 68 பட பூஜை வீடியோ வெளியானது

தளபதி 68 பட பூஜை வீடியோ வெளியானது

-

- Advertisement -
லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க இருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், பூஜை வீடியோ வெளியானது. இந்த காணொலி வாயிலாகவே, படக்குழுவினரையும் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், நாளை முதல் தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

MUST READ