spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரபல மலையாள நடிகர்..... சர்ப்ரைஸை வெளியிடும் துல்கர் சல்மான்!

தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரபல மலையாள நடிகர்….. சர்ப்ரைஸை வெளியிடும் துல்கர் சல்மான்!

-

- Advertisement -

திரைத்துறையில் பெரும்பாலான நடிகர்கள் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிலும் , மாலிவுட்டிலும், டோலிவுட்டில் நுழைந்து இந்திய அளவில் கவனம் பெற்று வருகின்றனர். ஏன் ஹாலிவுட் வரை சென்று எல்லை தாண்டி சாதனை படைத்து வருகின்றனர். அதுபோல மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தமிழ் சினிமாவிலும் முத்திரை பதித்து வருகின்றனர்.

தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரபல மலையாள நடிகர்..... சர்ப்ரைஸை வெளியிடும் துல்கர் சல்மான்!அந்த வகையில் தற்போது பிரபல மலையாள நடிகர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போகிறார். இந்த சர்ப்ரைஸானா அறிவிப்பை பான் இந்தியா நடிகர் துல்கர் சல்மான் இன்று மாலை 6 மணி அளவில் வெளியிட இருக்கிறார். இது குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரபல மலையாள நடிகர்..... சர்ப்ரைஸை வெளியிடும் துல்கர் சல்மான்!

we-r-hiring

மேலும் அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, சமீபத்தில் வெளியான RDX படத்தில் நடித்திருந்த ஷேன் நிகாம் தான் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஷேன் நிகாம், கடந்த 2013 இல் வெளியான நீலகாசம் பச்சகடல் சுவர்ன பூமி என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து கிஸ்மஸ், பாவா எனும் படத்தில் நடித்துள்ளார். ஆனால் கடந்த 2019 இல் வெளியான கும்பளங்கி நைட்ஸ் எனும் திரைப்படம் ஷேன் நிகாமுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல் மிகப் பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரபல மலையாள நடிகர்..... சர்ப்ரைஸை வெளியிடும் துல்கர் சல்மான்! இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ