ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் . அடுத்து தான் இயக்கி கதாநாயகனாக நடித்த லவ் டுடே படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். வெறும் ஐந்து கோடியில் எடுக்கப்பட்ட லவ் டுடே படம் கிட்டத்தட்ட 90 கோடி ரூபாயை வசூலித்தது. இதனால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ப்ரோமா ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அந்த ப்ரோமாவில் பிரதீப் ரங்கநாதன் பேரிச்சம் பழங்களை (DATES) விக்னேஷ் சிவனுக்கு கொடுத்து கால் சீட்டுக்கான டேட்டுகளை கொடுத்துள்ளதை நகைச்சுவையாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
Official announcement ✅
PradeepRanganathan X VigneshShivan X Anirudh X RKFI pic.twitter.com/OkSbaVsVpA— AmuthaBharathi (@CinemaWithAB) September 18, 2023
விக்னேஷ் சிவன் கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்பு நடிகர் அஜித்குமாரை இயக்கப் போவதாக அறிவித்து சில காரணங்களால் அது நடைபெறாமல் போனது. இந்நிலையில்தான் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளான இன்று இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். படத்தின் டைட்டில் ,நடிகர், நடிகையர், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


