Homeசெய்திகள்சினிமாநானியுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்த பிரியங்கா மோகன்

நானியுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்த பிரியங்கா மோகன்

-

- Advertisement -

நானி நடிக்கும் 31-வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். நாணியின் முப்பதாவது திரைப்படம் ஆன இந்த படத்தை சௌரவ் இயக்கியுள்ளார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவியிலும் தேசம் அப்துல்லா இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ,இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ‘நிழலிலேயே’ மற்றும் நான்னா என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஹாய் நான்னா படத்தைத் தொடர்ந்து நடிகர் நானி 31-வது திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். அடேட சுந்தரா படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயே இப்படத்தை இயக்குகிறார். டிடிவி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

இவர் ஏற்கனவே, கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நானியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகே அவருக்கு தமிழில் டாக்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

MUST READ