Homeசெய்திகள்சினிமாநெட்பிளிக்ஸில் வெளியாகும் ராஜமௌலியின் RRR ஆவணப்படம்!

நெட்பிளிக்ஸில் வெளியாகும் ராஜமௌலியின் RRR ஆவணப்படம்!

-

- Advertisement -

ராஜமௌலியின் RRR ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர். நெட்பிளிக்ஸில் வெளியாகும் ராஜமௌலியின் RRR ஆவணப்படம்!இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் இணைந்து ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா ஆகிய பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைக்க கே.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்து இருந்தார். இந்த படமானது 1920 களில் நடக்கும் கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வகையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது. காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த படம் பார்வையாளர்களை மிரள செய்தது. இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் இந்த படம் சக்கை போடு போட்டது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் அமெரிக்கர்களை குத்தாட்டம் போட வைத்ததோடு ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றது. நெட்பிளிக்ஸில் வெளியாகும் ராஜமௌலியின் RRR ஆவணப்படம்!இந்நிலையில் இந்த படத்தின் உருவான விதத்தை படக்குழுவினர் ஆவணப்படமாக்கியுள்ளனர். அதன்படி RRR: Behind and Beyond என்ற தலைப்பில் இந்த படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி சில திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாக இருக்கிறது.

MUST READ