spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனருடன் கைகோர்க்கும் ராம் சரண்.... வெளியான புதிய தகவல்!

தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனருடன் கைகோர்க்கும் ராம் சரண்…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

நடிகர் ராம் சரண் தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனருடன் கைகோர்க்கும் ராம் சரண்.... வெளியான புதிய தகவல்!

நடிகர் ராம்சரண் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் அர் ஆர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்துள்ளார் ராம் சரண்.இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகும் RC16, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் RC17 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடிக்கப் போவதாக செய்திகள் கசிந்து வருகிறது. தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனருடன் கைகோர்க்கும் ராம் சரண்.... வெளியான புதிய தகவல்!இந்நிலையில் ராம் சரண் தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது ராம் சரண், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறாராம். இது தொடர்பான அறிவிப்பு ராம் சரணின் 16வது படத்திற்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி 2 திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ