ரெட் லைட் தெரபியில் நடிகை சமந்தா… புகைப்படங்கள் வைரல்…
- Advertisement -

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமான சமந்தா, மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து சமந்தாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தமிழில் ஒரு முன்னணி நடிகையாக உயரத் தொடங்கினார். தமிழில் உச்சம் தொட்ட அதே நேரத்தில் தெலுங்கிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார்.

தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. பேமிலி மேன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து பாலிவுட் பக்கம் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தற்போது சிட்டாடெல் இந்தியா என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். இதனிடையே உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது நடிப்பில் கவனத்தை குறைத்துவிட்டு, சிகிச்சை, சுற்றுலா, உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்.
உடல் நல சிகிச்சைக்காக அவர் பல வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அண்மையில் அவர் ரெட் லைட் தெரபியை எடுத்துள்ளார். இதன் மூலம் சருமத்தில் உள்ள திசுக்களை புதுப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த தெரபியை தனது வளர்ப்பு பூனையுடன் சேர்ந்து நடிகை சமந்தா எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது