spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசெல்வராகவனின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட்!

செல்வராகவனின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

செல்வராகவன் தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆவார். நடிகர் தனுஷின் சகோதரரான இவர் காதல் கொண்டேன், புதுப்பேட்டை மயக்கம் என்ன, நானே வருவேன் உள்ளிட்ட படங்களை நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்கியுள்ளார். மேலும் ஆயிரத்தில் ஒருவன், 7 ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி என்னும் புதிய திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சமீப காலமாக செல்வராகவன் இருப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சாணிக் காகிதம், பகாசூரன், ஃபர்ஹானா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

we-r-hiring

தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. செல்வராகவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இவருடன் இணைந்து யோகி பாபு, மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ, தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரங்கநாதன் இயக்குகிறார். இப்படம் அரசியல் கதைகளத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாகவும், கொடைக்கானல் , ராமநாதபுரம் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ