spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகேப்டன் மில்லரில் தனுஷுக்கு வில்லனாகிய சிவராஜ்குமார்!

கேப்டன் மில்லரில் தனுஷுக்கு வில்லனாகிய சிவராஜ்குமார்!

-

- Advertisement -

அருண் மாதேஸ்வரன் இயக்கத்திலும், தனுஷின் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொகேன், சிவராஜ் குமார், நிவேதிதா சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படமாக கருதப்படும் கேப்டன் மில்லர் திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகி வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இந்த படத்தில் தனுஷின் அண்ணனாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கொள்ளையனாக நடித்துள்ளார் என்றும் படத்தின் முக்கியமான வில்லனே சிவராஜ்குமார் தான் என்று சில தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமார் வெறும் 10 நிமிடங்களே நடித்திருப்பார். ஜெய்லரில் சிவராஜ்குமார் இடம் பெற்ற காட்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இச்சமயம் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சிவராஜ் குமார் ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகப்படுத்தியுள்ளது. அதனால் சிவராஜ் குமாரின் கதாபாத்திரம் கேப்டன் மில்லரில் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

MUST READ