spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!

சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!

-

- Advertisement -

சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஆய்த எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, அவள் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதே சமயம் இவரது நடிப்பில் வெளியான சித்தா, 3BHK ஆகிய படங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவர், புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க ரேவா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்குகிறார். மேலும் இந்த புதிய படத்திற்கு ரௌடி & கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கும் நிலையில், அந்த அறிவிப்பு போஸ்டரில் இந்த படம் 2026 கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!

we-r-hiring

இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் ஏற்கனவே சித்தார்த் நடித்திருந்த ‘டக்கர்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் மீண்டும் சித்தார்த் – கார்த்திக் ஜி கிரிஷ் இணைந்துள்ள இந்த புதிய படம் வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ