Homeசெய்திகள்சினிமாநடிகைகளுடன் ஜி.வி.பிரகாஷ் நெருக்கம்... சைந்தவியின் பேட்டி வைரல்...

நடிகைகளுடன் ஜி.வி.பிரகாஷ் நெருக்கம்… சைந்தவியின் பேட்டி வைரல்…

-

தமிழ் திரையுலகில் ஜிவி பிரகாஷ் பாடகரும், இசை அமைப்பாளரும் ஆவார். அவரது மனைவி, சைந்தவி பல திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவரும் அண்மையில் தங்களின் விவாகரத்தை அறிவித்திருந்தனர். கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதி, விவாகரத்தை அறிவித்தது.

இச்செய்தி திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம், பலரும் இது குறித்து பல விதமான சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் கோபம் அடைந்த ஜி.வி.பிரகாஷ், தனிப்பட்ட வாழ்வில் அத்துமீறி நுழைவது தவறு என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பாடகி சைந்தவியின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஜிவி பிரகாஷ் நடிக்கத் தொடங்கியபோது, நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க கூடாது என்று கூறியிருந்தேன். இருப்பினும் முதல் படமான டார்லிங் படத்திலேயே அவர் அவ்வாறு நடித்திருந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது என கூறியிருக்கிறார். இந்த பழைய வீடியோவை இணையவாசிகள் தற்போது டிரெண்டாக்கி வருகின்றனர்.

MUST READ