Homeசெய்திகள்சினிமாவெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்... டைட்டில் டீசர் அறிவிப்பு...

வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…

-

- Advertisement -
குட்டி சுட்டீஸ் முதல் பெரியவர்கள் அனைவரும் கொண்டாடும் நாயகன் சிவகார்த்திகேயன். தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வரும் இவர், மெரினா படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரேமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், டாக்டர், டான் ஆகிய படங்களில் நடித்தார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் அயலான். ரவிக்குமார் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசைஅமைத்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இது 21-வது திரைப்படமாகும்.

ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி ஜம்முவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டிள் மற்றும் டைட்டிள் டீசர் வரும் 16-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்திற்காக வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் சிவகார்த்திகேயனின் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

MUST READ