spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் நடிக்கும் 'புறநானூறு'..... ஷூட்டிங் குறித்த தகவல்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’….. ஷூட்டிங் குறித்த தகவல்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் SK23 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் நடிக்கும் 'புறநானூறு'..... ஷூட்டிங் குறித்த தகவல்!இதற்கிடையில் சமீப காலமாக நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதாவது சிவகார்த்திகேயன் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சூர்யா நடிக்க இருந்த நிலையில் ஒரு சில அரசியல் காரணங்களால் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிவகார்த்திகேயன் நடிக்கும் 'புறநானூறு'..... ஷூட்டிங் குறித்த தகவல்!இந்நிலையில் சுதா கொங்கரா நடிகர் தனுஷை சந்தித்து புறநானூறு பட கதையை கூறி இருக்கிறார். தனுஷிற்கு புறநானூறு கதை பிடித்து போக அவரும் ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இரண்டு வருடங்கள் காத்திருக்குமாறு சுதா கொங்கிராவிடம் கேட்டிருக்கிறார் தனுஷ். ஆனால் சுதா கொங்கரா உடனடியாக படம் பண்ண வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் நாம் இருவரும் இணைந்து வேறு ஒரு ப்ராஜெக்ட் பண்ணுவோம் என்று சொல்லிவிட்டாராம். எனது தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் சென்றுள்ளார் சுதா கொங்கரா. சிவகார்த்திகேயன் நடிக்கும் 'புறநானூறு'..... ஷூட்டிங் குறித்த தகவல்!அதன் பின்னர் தான் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இந்த தகவலும் கிட்டத்தட்ட உறுதியான தகவலாக தான் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது புறநானூறு திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ