spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇணையத்தில் லீக்கான சிவகார்த்திகேயனின் 'SK21' பட சீன்ஸ்..... படக்குழுவினர் அதிர்ச்சி!

இணையத்தில் லீக்கான சிவகார்த்திகேயனின் ‘SK21’ பட சீன்ஸ்….. படக்குழுவினர் அதிர்ச்சி!

-

- Advertisement -

இணையத்தில் லீக்கான சிவகார்த்திகேயனின் 'SK21' பட சீன்ஸ்..... படக்குழுவினர் அதிர்ச்சி!தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். ராகுல் போஸ் வில்லனாக நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இணையத்தில் லீக்கான சிவகார்த்திகேயனின் 'SK21' பட சீன்ஸ்..... படக்குழுவினர் அதிர்ச்சி!

இந்நிலையில் SK21 படக்காட்சிகள் இணையத்தில்கசிந்துள்ளது அதை கண்ட பட குழுவினர் அதிர்ச்சி அடைந்து அக்காட்சியை இணையத்திலிருந்து நீக்கியுள்ளனர். மேலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் அப்பாவாக நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

சிவகார்த்திகேயன் SK21 படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதற்கிடையில் தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

MUST READ