Homeசெய்திகள்சினிமாதனது காதலி குறித்து மனம் திறந்த எஸ்ஜே சூர்யா!

தனது காதலி குறித்து மனம் திறந்த எஸ்ஜே சூர்யா!

-

இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யா தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ்ஜே சூர்யா திரையுலகில் கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித், சிம்ரன், ஜோதிகா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. அதன் பின் விஜய், ஜோதிகா கூட்டணியில் ‘குஷி’ படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அதன்பின் நியூ, இசை உள்ளிட்ட படங்களை இயக்கி தானே நடித்து வந்தார். ஆனால் தற்போது படம் இயக்குவதை விட்டுவிட்டு முற்றிலும் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் வில்லனாக நடித்திருந்த ஸ்பைடர், மெர்சல், மாநாடு உள்ளிட்ட படங்கள் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் இயக்குனர் சங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ மற்றும் ‘இந்தியன் 2’ படங்களிலும் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்க இருக்கும் ‘தளபதி 68’ படத்திலும் இவர் வில்லனாக நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் என்று செய்திகள் பரவி வருகிறது.
இதற்கிடையில் பொம்மை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் 54 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் எஸ்ஜே சூர்யாவிடம் திருமணம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்துள்ள எஸ்ஜே சூர்யா, தனக்கு சினிமா தான் முக்கியம் என்றும் தான் சினிமாவை காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.

MUST READ