Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் பேராதரவை பெறும் சூரியின் 'மாமன்'.... 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

ரசிகர்களின் பேராதரவை பெறும் சூரியின் ‘மாமன்’…. 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

-

- Advertisement -

மாமன் படத்தின் வசூல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.ரசிகர்களின் பேராதரவை பெறும் சூரியின் 'மாமன்'.... 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சூரி. அதை தொடர்ந்து இவர், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியனாக நடித்து பெயரையும், புகழையும் பெற்றார். அதன் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் சூரியை தனது விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற சூரிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அந்த வகையில் தொடந்து ஹீரோவாக நடித்து வரும் சூரி தற்போது மண்டாடி திரைப்படத்தினை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் கடந்த மே 16ஆம் தேதி இவரது நடிப்பில் மாமன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. ஹேஷம் அப்துல் வாகப் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இதில் சூரியுடன் இணைந்து ராஜ் கிரண், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களின் பேராதரவை பெறும் சூரியின் 'மாமன்'.... 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?இந்த படமானது தாய்மாமன் – மருமகனுக்கு இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் நாளுக்கு நாள் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியான 10 நாட்களில் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ