- Advertisement -
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 தொடரின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
தமிழ் மக்கள் கோலிவுட் திரைப்படங்கள் மட்டுமன்றி அனைத்து மொழி திரைப்படங்களையும் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓடிடி தளத்தில் ஏராளமான இணைய தொடர்களும், திரைப்படங்களும் வெளியாகின்றன. தமிழ் மொழி மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்கள் ஓடிடி தளத்திற்கு வருகின்றன. இவை அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்கின்றன. அது மட்டுமன்றி, ஹாலிவுட் தொடர்களிலும் மக்கள் ஆர்வம் செலுத்த தொடங்கினர்.
அந்த வகையில், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான தொடர் தான் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ். சயின்ஸ், நட்பு, காதல் என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் தொடராக வெளியானது. இதன் முதல் நான்கு சீசன்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. முதலில் ஆங்கில மொழியில் மட்டும் இந்த தொடர் வெளியிடப்பட்டது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த தொடருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து அடுத்தடுத்த சீசன்கள் தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகின.