- Advertisement -
அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் வந்து சேர்ந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்திய திரையுலகமே சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடும் நட்சத்திர நாயகன் ரஜினிகாந்த். தமிழ் திரையுலகம் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒட்டுமொத்த திரையுலகிற்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 150 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் தற்போதும் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் இறுதியாக வௌியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இதைத் தொடர்ந்து, தற்போது ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும், இப்படத்தில் ராணா, பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியார் உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் என மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.



