Homeசெய்திகள்சினிமாடாப் மலையாள இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் விஜய் மகன்

டாப் மலையாள இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் விஜய் மகன்

-

இயக்குநராக அறிமுகமாக உள்ள நடிகர் விஜய்யின் மகன் ஜேஷன் சஞ்சய், பிரபல மலையாள நடிகரை களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கோலிவுட் திரையுலகில் தளபதியாக கொண்டாடப்படும் நாயகன் விஜய். பொதுவாக இப்படியான நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவில் நடிகர்களாகவே களமிறங்குவர். ஆனால் இதற்கு மாறாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.ஜேசன், தான் இயக்குனர் தான் ஆவேன் என்று உறுதியாக கூறி உள்ளார். இதனிடையே ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியானது

 

அதன்படி இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் கவின் நாயகனாக நடிப்பதாகவும், ஏ ஆர் ரஹ்மானின் மகன் இசை அமைப்பதாகவும் தகவல் வௌியாகியுள்ளது. மேலும், படத்தின் படப்பிடிப்புக்கான பூஜையும் கடந்த ஆண்டே நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து படம் தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. விரைவில் படத்தின் நாயகன் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இசை அமைப்பாளர் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் தகவல் வெளியாகும்.

MUST READ