Homeசெய்திகள்சினிமாவிரைவில் தொடங்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு!

விரைவில் தொடங்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு!

-

அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.விரைவில் தொடங்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு!

தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவர் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜித்தின் 62 ஆவது படமான இந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அஜித்தின் 63வது படமாக உருவாக உள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியான நிலையில் இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. விரைவில் தொடங்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு!அதன்படி குட் பேட் அக்லி படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 2024 மே 10ஆம் தேதி அன்று ஐதராபாத்தில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ