Homeசெய்திகள்சினிமாஇப்போ 200 கோடி ஆயிடுச்சு... எதிர்ப்புகளை எகிறி அடித்து வசூலில் விளாசும் 'தி கேரளா ஸ்டோரி'!

இப்போ 200 கோடி ஆயிடுச்சு… எதிர்ப்புகளை எகிறி அடித்து வசூலில் விளாசும் ‘தி கேரளா ஸ்டோரி’!

-

- Advertisement -

இயக்குனர் சுதீப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.

இப்படத்தில் யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இட்நானி, அடா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் சைன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. வீரேஷ் ஸ்ரீவல்ஸா இசையமைத்துள்ளார்.

தி கேரளா ஸ்டோரி படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகள் எழுந்தன.

பின்பு படத்தின் ட்ரெய்லரில் இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி இத்திரைப்படத்தின் கதையானது, கேரளாவில் காணாமல் போன 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இது போன்ற சர்ச்சைக்குள்ளான காட்சிகளினால் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இத்திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்தது.
எனினும் மேற்கு வங்காளத்தில், கடந்த மே 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இப்படத்தை மறைமுகமாகவோ நேரடியாகவோ தடை செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.
இவ்வாறு பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் மே 22 ஆம் தேதி வரை பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்ப கிளம்ப மறுபக்கம் வரவேற்பு அதிகரித்து வருவதை இந்த வசூல் நிலவரம் நமக்கு தெரியப்படுத்துகிறது.

MUST READ