Homeசெய்திகள்சினிமாரூ.70 லட்சத்தில் வைர வாட்ச்... கவனம் ஈர்க்கும் சமந்தா...

ரூ.70 லட்சத்தில் வைர வாட்ச்… கவனம் ஈர்க்கும் சமந்தா…

-

- Advertisement -
தமிழ் திரையுலகம் மட்டுமன்றி இந்திய திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் குஷி. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து அவர் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா நடிக்காவிட்டாலும், இன்ஸ்டா மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் வௌியிட்டு ஆக்டிவாக உள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, அது தொடர்பாக தன் அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். தற்போது, உடல்நலம் தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். விரைவில் சினிமாவில் கம்பேக் கொடுக்கவும் அவர் தயாராகி உள்ளார். நடிகை சமந்தா ஹாலிவுட்டில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவரால் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், அப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அவரும் அப்படத்திலிருந்து விலகினார்.

இந்நிலையில், இட்ஸ் ஃபேஷன் பேபி என்ற தலைப்பில், நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த படங்களில் நடிகை சமந்தா அணிந்திருந்த கைக் கடிகாரம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாம்பு போன்ற வடிவத்தில் இருந்த அந்த கடிகாரத்தின் பயர் செர்பெண்டி ஸ்பிகா. இந்த கடிகாரத்தில் விலை சுமார் 70 லட்சம் ரூபாய் ஆகும். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ