spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகென் கருணாஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

கென் கருணாஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

-

- Advertisement -

கென் கருணாஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.கென் கருணாஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

தமிழ் திரையுலக ஜோடியான கருணாஸ் – கிரேஸ் கருணாஸ் தம்பதிகளின் வாரிசும், அசுரன் படத்தின் மூலமாக கவனத்தை ஈர்த்த பிரபல நடிகர் கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இந்த விழாவில் தமிழ் திரையுலகத்தை சார்ந்த முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.கென் கருணாஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

we-r-hiring

கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கென் கருணாஸ், அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ் , பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்கிறார். கென் கருணாஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுசின் பிரத்யேக உடை அலங்கார நிபுணரான காவ்யா ஸ்ரீராம் இப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். பள்ளிக்கூட பின்னணியில் கலகலப்பான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் – காளி ராஜ்குமார் – சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.கென் கருணாஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான கார்த்தி, விஷால் , இயக்குநர் வெற்றிமாறன், நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, டாக்டர் ஐசரி கே. கணேஷ், அருண் உள்ளிட்ட பலர் நேரில் வருகை தந்து படக்குழுவினரை வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ