Homeசெய்திகள்சினிமாஇணையத்தில் பரவும் 'இந்தியன் 2' படத்தின் கதை!

இணையத்தில் பரவும் ‘இந்தியன் 2’ படத்தின் கதை!

-

இயக்குனர் சங்கர் கடந்த 1996 இல் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் வெளியாகி இருந்த இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இணையத்தில் பரவும் 'இந்தியன் 2' படத்தின் கதை!அதன் பிறகு நீண்ட இடைவெளிகள் கழித்து இந்தியன் 2 திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் ஷங்கர். இதில் கமலுடன் இணைந்து சித்தார்த், எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்தை இசையமைத்திருக்கிறார். இந்த படத்தையும் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து இந்த படமானது 2024 ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே சமயம் இந்த படத்தின் பாரா எனும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்தியன் 2 திரைப்படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி நேரு அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் கதை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.இணையத்தில் பரவும் 'இந்தியன் 2' படத்தின் கதை! அதாவது சேனாதிபதி தாத்தா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இவர் ஊழலுக்கு எதிராக போராடுபவராக மாறினார் என்பது இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் கதையாகும். அதே சமயம் இந்தியன் படத்தில் கிளைமாக்ஸில் சேனாதிபதி ஹாங்காங் செல்வது போலவும் ஊழல் இனி எப்போதாவது நடந்தால் நாடு திரும்புவதாகவும் படம் முடிக்கப்பட்டு இருந்தது.

நாட்டிலுள்ள ஊழல்  அரசியல்வாதிகளை இணையத்தில் வீடியோக்களின் மூலம் அம்பலப்படுத்தும் இளைஞனுக்கு (சித்தார்த்) உதவி செய்வதற்காக நாடு திரும்புகிறார் சேனாதிபதி. இதுதான் இந்தியன் 2 படத்தின் கதைச்சுருக்கம். இவ்வாறு தொடர்ந்து வெளியாகும் அப்டேட்டுகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகமாகி வருகிறது.

MUST READ